Sunday, March 20, 2011

நிலா



திண்மை கலந்த
மென்மை கொண்டவள்.
பெரியார் போல்
தீண்டாமை தவிர்த்தவள்*
அவளே
அழகின் இலக்கணம்.

* i used the word "பெரியார் போல தீண்டாமை தவிர்த்தவள்" because except moon man did not managed to touch any other natural satellite or planet





.

Saturday, March 19, 2011

சூரியன்




உலகத்தின் ஒளி விளக்கு
இயல்புக்கு
இவனே விலக்கு
காய்ச்சல் வந்து காய்வதுண்டு
ஆனால் மாய்வதில்லை.....


தீண்டியவரை தீர்த்திடுவான்
கொடையில் உலகை கொளுத்திடும்
இவனே
பாலையின் சொந்தக்காரன்.




.

Friday, March 11, 2011

சுனாமி



நீலப் புடவையில்
சிணுங்கிச் சென்றவளே!
சிகப்பு ஆடை வேண்டுமென்றால்
சொல்லிவிடு,
அதற்கு ஏன்
எங்கள் இரத்தத்தை
கேட்கிறாய்??



.

சுனாமி



பொறுமையாய் வாழ்ந்தவளே!!
இன்று ஏன்
இத்தனை கோபம்?

பாதங்களை தழுவியதற்கு,
உடலையே விலை பேசுகிறாயே!!

புரிந்துகொள்!!
நீ அடிமையாய் வாழ பிறந்தவள்.
அடக்கி ஆல்வதர்க்கல்ல...
என்றும்
"அடிமைத்தனம் தான்
உனக்கு அழகு".


.

Wednesday, March 2, 2011

ஹைக்கூ


உன்னை உனக்கே
பரிசளிக்கிறேன்.





.

Tuesday, March 1, 2011

ஹைக்கூ



உனக்காகவே துடிக்கிறது
என் இதயம்!!
என்னை
துடிக்க வைப்பதற்க்காக
துடிக்கிறாய் நீ!!










.

Thursday, February 10, 2011

இயற்கை



இசையமைக்கபடாத
இனிய குழல்
ஓசை.


.

கல்லூரி




மூன்று ஆண்டுகளில்
எல்லாம் மாறிவிட்டன.
வகுப்பறைகள்,
வாத்தியார்கள்,
புத்தகங்கள்,
புகலிடங்கள்
எல்லாம் மாறிவிட்டன.


உன் பேச மறந்த
உதடுகளை தவிர...



.

Monday, January 31, 2011

இலையுதிர்காலம்



மரங்களின் நிர்வாணம்.



.

உழைப்பாளி







சுருங்கி இருப்பது
தேகம் மட்டுமே
உழைக்கும் தாகம் அல்ல.....





.

Sunday, January 30, 2011

சமர்ப்பணம்






கவியரச!!!
நீ என்ன அரவாணியா ?
ஆண் பால், பெண் பால் உணர்வுகளை
ஒரு சேர சொல்கிறாயே.
எங்கள் உயிர் அணுக்களை கேள்வி கேட்கிறாயே...

                             ***

எப்படி போற்றுவேன் உன் வைர வரிகளை
அவை
தங்க தட்டில் சிந்திய
தாய்ப்பாலோ !

                             ***

நீ ஒரு ஆலமரம்
உன் நிழலில்
மாந்தரும், மயிலும்
மட்டுமல்ல
தமிழும் இன்பமாய் தலைசாயக்கிறது.

                            ***

1980களில் மரபு கவிதையும், புது கவிதையும்
கலப்புத் திருமணம்
செய்துகொண்டன.
அவற்றுக்கு பிறந்த தலைமகனா நீ ?

                            ***

இன்னுமொரு பிறவி
என்றிருந்தால்
நீ பிடித்தேழுதும்
பேனாவாக
நான்
பிறத்தல் வேண்டும்.
உன் கவிதைகளை
உன்னுடனே
சேர்ந்து படித்தல்
வேண்டும்.




.

மகள்




விருந்தினராக வீட்டுக்குள்
நுழைந்தாள்
அவ்வீட்டின் இறந்தகால
"இளவரசி"


.

Saturday, January 29, 2011

மழை



நாணயங்களாக
சேகரித்த உண்டியல்
உடைந்தது
மார்கழி மாதத்தில்.
மூழ்கின பயிர்கள்
மழையினாள் மட்டுமல்ல
கண்ணிரினாலும் கூட.



.

Friday, January 28, 2011

முதல் நாள்





இருந்ததில்லை இதுபோல்
என்றும்
என் இதயம்.
நேற்று வரை துடித்திருந்தது
இன்றைய தேதிக்காக.
இன்று முதல் துடிக்கிறது
உன் ஒருத்தியின் பார்வைக்காக...



.

சிசு கொலை





வாழ்க்கை தாளில்
கையொப்பம் இடும் முன்பே
அழிக்கப்படுகின்றன
பிஞ்சுகளின்
பெயர்கள்.


.

பூகம்பம்





பூமியின் நடனம்
முடிந்ததும்
ரசித்தவர் யாருமில்லை.




.

முத்தம்




இரண்டு இதயங்களின்
இன்ப வெளிபாடு
உணர்வுகள் மட்டும்
பேசும்
உன்னத வார்த்தை.













.

ரோஜா




அழகு ஆபத்தானது
அறியாத
ரோஜா
அழகாய் பிறக்கிறது
இறப்பதர்க்காக.





.

பிச்சைக்காரி





பாடிய செய்யுளையே
அனைத்து
மன்னர்களிடமும் பாடி
பரிசு வாங்காமல்
போவதில்லை

அந்த "இலட்சாதிபதி".










.

விடியல்



 மஞ்சள் ஒளி
மண்ணை அடைந்திட
அழகிய மலர்கள்
மனத்தை வீசிட
எறும்புகள் தன்
இரையை தேடிட
ஏன் இன்னும்
கனவில் நீ !
விழித்திடு !!
காவியம் படைத்திடு !!




.

நீ






தூங்க செல்கிறது
நிலா
சோம்பல் முறித்து
எழுகிறாய்
"நீ"




.

குழந்தை தொழிலாளி





பௌர்ணமிக்கு
முன் தேயும்
நிலா




.

சிந்தனையின் சொத்துக்கள்



சுயநலம் கொண்ட
இவ்வுலகில்
அகன்ற மனதுடன்
அனைவருடனும்
பகிர்ந்து கொள்கிறேன்
என்
"சிந்தனையின் சொத்துக்களை".





.