Sunday, January 30, 2011

சமர்ப்பணம்






கவியரச!!!
நீ என்ன அரவாணியா ?
ஆண் பால், பெண் பால் உணர்வுகளை
ஒரு சேர சொல்கிறாயே.
எங்கள் உயிர் அணுக்களை கேள்வி கேட்கிறாயே...

                             ***

எப்படி போற்றுவேன் உன் வைர வரிகளை
அவை
தங்க தட்டில் சிந்திய
தாய்ப்பாலோ !

                             ***

நீ ஒரு ஆலமரம்
உன் நிழலில்
மாந்தரும், மயிலும்
மட்டுமல்ல
தமிழும் இன்பமாய் தலைசாயக்கிறது.

                            ***

1980களில் மரபு கவிதையும், புது கவிதையும்
கலப்புத் திருமணம்
செய்துகொண்டன.
அவற்றுக்கு பிறந்த தலைமகனா நீ ?

                            ***

இன்னுமொரு பிறவி
என்றிருந்தால்
நீ பிடித்தேழுதும்
பேனாவாக
நான்
பிறத்தல் வேண்டும்.
உன் கவிதைகளை
உன்னுடனே
சேர்ந்து படித்தல்
வேண்டும்.




.

2 comments: